நியூசிலாந்து பயிற்சியாளர் குழுவில் ஸ்டீபன் பிளெமிங்!

#India #Cricket #sports #Tamilnews #England #Player #ImportantNews #Sports News
Mani
2 years ago
நியூசிலாந்து பயிற்சியாளர் குழுவில் ஸ்டீபன் பிளெமிங்!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன. இந்த மாதம் ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்து அணியுடன் இந்த குழு இணைந்து செயல்படுவர்.

பிளெமிங் அணியில் இணைவது வீரர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மேலும் ஊழியர்களுக்கும் நல்லது என நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4