இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி வாழ்த்து!

#2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி வாழ்த்து!

சந்திராயன்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில்,

சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள். அனைத்து இந்தியர்கள் குறிப்பாக இளைய தலைமுறைக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது, இஸ்ரோ மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.

நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதற்காக இஸ்ரோவுக்கு எனது பாராட்டுகள். நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கி வெற்றிகண்ட 4-ஆவது நாடு என்ற பெருமையை எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.