பிரான்ஸில் நகரசபை ஆவணங்கள் ஹெக் செய்யப்பட்டுள்ளது
#France
#Lanka4
#லங்கா4
#stealing
#Hacker
#urban council
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago

Sartrouville (Yvelines) நகரசபையில் இருந்து சில முக்கியமான அவணங்கள் திருடப்பட்டுள்ளன. இணையத்தளத்தினை Hack செய்து இந்த தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 16 ஆம் திகதி இரவு குறித்த நகரசபையின் இணையத்தளம் Hack செய்யப்பட்டதாகவும், அதில் பதிவேற்றப்பட்டிருந்த சில முக்கிய தரவுகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு நிறுவனங்களின் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான விபரங்கள், வியாபார ஆவணங்கள், ஊழியர்களின் விபரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் இணையத்தள குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகளான Cyber அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



