பிரான்ஸின் பரிஸ் நகரத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஒரு பெண் குழந்தைப்பிரசவம்
பரிசில் இருந்து பிரெஞ்சுத் தீவான Martinique இற்கு பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான சம்பவம் Air Caraïbes விமான சேவைகளுக்குச் சொந்தமான TX514 இலக்க விமானத்தில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவர் விமானத்தில் ஏறிய நிலையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அப்பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்துள்ளது.
அவருக்கு தண்ணீர் குடம் உடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமானத்துக்குள் இருந்த பயணிகளில் மருத்துவர்கள் யாரேனும் உள்ளனரா என வினாவப்பட்டனர். உடனடியாக ஒரு மருத்துவ பயணியும், இரு தாதியினரும் முன்வந்து அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.
பறக்கும் விமானத்தில் குறித்த பெண் ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். பின்னர் இத்தகவல் Martinique Aimé Césaire விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களில் குழந்தை மற்றும் தாய் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.