நீரிழிவு நோய்க்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு

#Health #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4 #அன்டனி தேவராஜ் #Antoni Thevaraj #நீரிழிவு #உயர் இரத்த அழுத்தம் #Diabetics #Hypertension
நீரிழிவு நோய்க்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் உள்ள தொடர்பு

நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டுமே வாழ்நாள் முழுக்க கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டிய ஒரு நோய் நிலை.

 மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் முறையற்ற உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும் இருந்தால் கட்டாயம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலாமல் போகும்.

 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை உயர் இரத்த அழுத்தம் இரண்டு மடங்கு அதிகமாகத் தாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா.

 ஆம், நீரிழிவு நோய் வந்துவிட்டாலே பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தமும் வந்துவிடும் அபாயம் அதிகமாக உள்ளது.

 தேசிய மையத்தின் பயோடெக்னாலஜி ஆய்வின்படி, அமெரிக்க மக்கள்தொகையில் டைப் 1 நீரிழிவு நோயாளிகளில் தோராயமாக 30 சதவீதம் பேருக்கும், டைப் 2 நீரிழிவு நோயாளிகளில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் பேருக்கும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

 இதுகுறித்த மற்றொரு ஆய்வில், டைப் 2 நீரிழிவு நோய் சாதாரண இரத்த அழுத்தம் உள்ளவர்களைக் காட்டிலும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் 2.5 மடங்கு அதிகமாக உள்ளது.

 உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவிலான உடல் நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிக்கலான கண் நோய்கள், சிறுநீரக நோய்கள், மூளை பிரச்சனைகள், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் புற இரத்த நாளங்களின் பிரச்சனைகள் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

 இரண்டும் நோய்களையும் நிர்வகிக்க என்ன தான் தீர்வு என்றால், நீங்கள் சரியான ஒரு உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் உணவில் இனிப்புகள், அதிகப்படியான கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் எதை சாப்பிட விரும்புகிறீர்களோ, அதே அளவுக்கு உணவின் அளவும் முக்கியமானது. 

அதிக அளவிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது, குறைவாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் உங்களின் உணவில் தானியங்கள், பீன்ஸ், பருப்பு, பச்சை காய்கறிகள், பழங்கள் (சர்க்கரை இல்லாதது) கோதுமை, ஓட்ஸ், பிரவுன் அரிசி, உளுந்து, மற்றும் சோளம் போன்ற முழு தானியங்களை சேர்க்கலாம்.

 அதுமட்டுமின்றி, உலர் பழங்களான பாதாம் பருப்பு, வால்நட்ஸ், பேரிச்சம்பழம் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

images/content-image/1692949315.jpg

 நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் கொண்டுள்ளவர்கள் சீஸ், பிஸ்கட்டுகள், கேக்குகள், பாஸ்ட்புட் உணவுகள், கூடுதல் சர்க்கரை சேர்த்த உணவுகள், சர்க்கரை சேர்த்த குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

 மேலும், நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் சிவப்பு இறைச்சியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதே நீண்ட ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான மிகச்சிறந்த வழி. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் செயல்பாடு மிகவும் முக்கியமானது. உடல் உழைப்பு இல்லாததால் பல பிரச்சனைகள் ஏற்படும்.

 தொழில்நுட்பம் நம்மை சோம்பேறிகளாக மாற்றி வருகிறது. அனைத்துக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை விடுத்து உடல் உழைப்பை வழக்கத்தைவிட சற்று அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

மேலும், சில பயிற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். இதனால் இதய நோய்களைத் தவிர்க்கலாம்:

 நடைப்பயிற்சி : ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது.

 சைக்கிளிங் : தினமும் 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்,

 நீச்சல் மற்றும் வெளிப்புற விளையாட்டு : தினசரி 30-40 நிமிடங்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபடலாம். 

அதேபோல் ஏதேனும் ஒரு வெளிப்புற விளையாட்டை விளையாடலாம்.

 யோகா பயிற்சிகளில் ஈடுபடுங்கள் : அதுமட்டுமின்றி, மன அழுத்தத்திலிருந்து விடுபட ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் வரை யோகா பயிற்சி செய்யலாம்.

 இதன்மூலம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையையும், நீண்ட ஆயுளையும் பெற முடியும்.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1692948966.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4