பிரான்ஸில் உக்ரைன் கிவ் நகர நட்பை குறிக்க பூங்கா திறந்துவைப்பு
#France
#Ukraine
#Lanka4
#லங்கா4
#உக்ரைன்
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
பிரான்ஸில் உக்ரைன் தலைநகர கிவ்வுடனான நட்பை கொண்டாடும் விதத்தில் பரிசில் பூங்கா ஒன்று நேற்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இரு நாட்டின் தலைநகரங்களான பரிஸ்-கீவ் நட்புறவைக் கொண்டாடும் வகையிலும், ரஷ்ய, உக்ரேன் யுத்தத்தில் உக்ரேனிய மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டவும் இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
"jardin de Kyiv" என பெயரிடப்பட்டுள்ள இந்த தோட்டம் 40,000 சதுர மீற்றர் கொண்ட புல்வெளிகள் நிறைந்த பகுதியாகும். பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Petit-Palais பூங்காவினை ஒரு பகுதியாகப் பிரித்து, அதனையே இந்த jardin de Kyiv பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவினை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ மற்றும் கீவ் நகர முதல்வர் விட்டாலி ஆகியோர் இதனை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்தனர்.