சந்திரமுகி- 2 படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #ImportantNews #Movie
Mani
2 years ago
சந்திரமுகி- 2 படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதில் வடிவேலு, ராதிகா மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடலான 'மோருணியே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘சந்திரமுகி-2’ படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4