பிரான்ஸின் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் கைதி உயிரிழப்பு
#Death
#France
#Prison
#Lanka4
#தீ_விபத்து
#மரணம்
#fire
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
சிறைச்சாலை ஒன்றில் இருந்து எரிந்த நிலையில் கைதி ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. Nanterre (Hauts-de-Seine) சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை சிறைச்சாலைக்குள் திடீரென தீ பரவியதாகவும், தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 40 வரையான கைதிகள் வெளியேற்றப்பட்டதன் பின்னரே தீயணைப்பு பணிகள் மேற்கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து தீ அணைக்கப்பட்டது. அதன் முடிவில் கைதி ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறைவைக்கப்பட்டிருந்த 35 வயதுடைய கைதி ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.