ஒட்டு மொத்த பிக்குகள் சமூகம் குறித்தும் தவறான அபிப்பிராயத்தை கட்டியெழுப்ப முயற்சி!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
ஒட்டு மொத்த பிக்குகள் சமூகம் குறித்தும் தவறான அபிப்பிராயத்தை கட்டியெழுப்ப முயற்சி!

சில பிக்குகளின் தவறான செயற்பாடுகளாலும், ஊடகங்கள் ஊடாக சமூகமயப்படுத்தப்படுவதாலும் ஒட்டு மொத்த பிக்குகள் சமூகம் குறித்தும் தவறான அபிப்பிராயத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக மல்வத்து தரப்பு அனுநாயக்க வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி தேரபா தெரிவித்தார். 

தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் காரணமாக இந்நிலைமை  அவதானிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

வரலாற்றுச் சிறப்புமிக்க ஹொரணை ஒலபொடுவ ரஜமஹா விகாரஸ்தானத்தில் நடைபெற்ற மேல்மாகாண சங்க தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும் தெரிவித்த அவர்,  “ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படும் சில பிழையான விடயங்கள் தொடர்பாக பிக்குகள் வெளியிட்ட கருத்துக்களால், இன்று பிக்கு சமூகம் பற்றிய தவறான கருத்துக்களை மிகவும் உணர்வுப்பூர்வமாக உள்வாங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது புரியும். 

அரசியல் ரீதியாக ஸ்திரமின்மை நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகளால் இந்த விஷயங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4