பிரான்ஸ் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட கத்திக்குத்தலில் ஒருவர் பலி!
இரவு விடுதி ஒன்றின் அருகே வைத்து இளைஞன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளான்.
இத்தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் இத்தாக்குதல் Nancy (Meurthe-et-Moselle) நகரில் இடம்பெற்றுள்ளது.
25 வயதுடைய ஒருவர் தனது காதலியுடன் இருக்கும் போது, அவரை சூழ்ந்துகொண்ட இளைஞர்கள் சிலர் அவரை தாக்கத்தொடங்கினர். கண்மூடித்தனமான தாக்குதலை அடுத்து, அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
அங்கு காவல்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலமணிநேரங்களில் இளைஞன் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.