கலாசார நினைவுப் பொருட்களை இலங்கையிடம் வழங்கும் நெதர்லாந்து!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
கலாசார நினைவுப் பொருட்களை இலங்கையிடம் வழங்கும் நெதர்லாந்து!

நெதர்லாந்து தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். 

இலங்கையிலிருந்து கொண்டுசென்ற கலாசார மற்றும் பாரம்பரிய நினைவு பொருட்களை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்காக குறித்த குழுவினர் இலங்கை வந்துள்ளனர். 

நெதர்லாந்தின் கலாசார மற்றும் ஊடகத்துறைக்கான மாநிலச் செயலாளர் குணாய் உஸ்லு தலைமையிலான தூதுக்குழுவினரே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இருந்து கொண்டுச்செல்லப்பட்ட வாள்கள், ஒரு சிங்கள கலாசாரக் கத்தி, வெள்ளி வாள் ஆகியவற்றை மீண்டும் வழங்க அந்நாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இன்று (28.08)  குறித்த பொருட்களின் உரிமையை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கான ஆவணங்களில் கைச்சாத்திடவுள்ளனர்.  

இந்த வரலாற்றுத் தருணத்தைக் குறிக்கும் வகையில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அரச செயலாளர் மற்றும் தூதுக்குழுவினர் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4