நீர் தேடி வரும் விலங்குகளை வேட்டையாடிய 18 பேர் கைது!

#SriLanka #Arrest #Lanka4
Thamilini
2 years ago
நீர் தேடி வரும் விலங்குகளை வேட்டையாடிய 18 பேர் கைது!

தண்ணீர் தேடி வரும் விலங்குகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

கலா ஓயாவில் நிலவும் வரட்சி காரணமாக நீர் தேடி வரும் விலங்குகளை திட்டமிட்டு வேட்டையாடிய குற்றச்சாட்டில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வனத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ வனவிலங்கு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே குறித்த கைது நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து  கைத்துப்பாக்கி, 12 போர் துப்பாக்கி, கத்திகள், மின்விளக்குகள், வெடிமருந்து உறைகள், வெடிமருந்துகள், வான் குச்சிகள், 7 மோட்டார் சைக்கிள்கள், கூடாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் வனாத்தவில்லுவ மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சோதனையின் போது மேலும் 8 சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4