பிரான்ஸில் பாடசாலைகளில் இஸ்லாமிய ஆடை அணிதலுக்கு தடை

#France #Muslim #Lanka4 #தடை #Ban #லங்கா4 #பிரான்ஸ்
பிரான்ஸில் பாடசாலைகளில் இஸ்லாமிய ஆடை அணிதலுக்கு தடை

பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை அணிய தடை விதிக்கப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சர் Gabriel Attal வெளியிட்ட கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 புதிய கல்வி ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில், தேசிய கல்வி அமைச்சர் Gabriel Attal , ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டார்.

 அதன்போது,. பாடசாலைகளில் வேற்றுமையை தோற்றுவிக்காமல் இருக்க, இஸ்லாமிய கலாச்சார ஆடைகளை தடை விதிக்கும் முனைப்புடன் அரசு உள்ளதாக தெரிவித்தார்.

 இஸ்லாமிய பெண்கள் அணியும் அபாயா (abaya ) என அழைக்கப்படும் முழு நீள ஆடைகள் அணிந்து பாடசாலைகளுக்கு செல்வதை தடை செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 பாடசாலைகளுக்கும் - பிரெஞ்சு மாணவர்களுக்கும் இடையே வலுவான நம்பிக்கையை கட்டி எழுப்புவதே சவால்!” என அமைச்சர் தெரிவித்தார்.

 இந்த அறிவிப்புக்கு உடனடியாகவே எதிர்ப்பும் ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வலது சாரதி கட்சியினை ஆதரவுக்கரம் நீட்ட, இடதுசாரிகள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!