பிரித்தானியாவின் விமான சேவைகள் பாதிப்பு!
#SriLanka
#Lanka4
#Britain
Dhushanthini K
1 year ago
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்பச் சிக்கல் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் விமானங்கள் தாமதமாகலாம் எனவும் சில விமானங்கள் இரத்து செய்யப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொறியாளர்கள் தொழிநுட்ப சிக்கலை கண்டறியும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டன் லூடன் மற்றும் பர்மிங்காம் விமான நிலையங்களில் பயணிகள் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.