நிரம்பி வழியும் நாய் உண்ணிகள்: மூடப்பட்டது பாடசாலை

#SriLanka #School #closed #Dog
Prathees
2 years ago
நிரம்பி வழியும் நாய் உண்ணிகள்: மூடப்பட்டது பாடசாலை

பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு நாய் உண்ணிகள் காரணமாக இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது.

 28, 29 ஆகிய திகதிகளில் 1-5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமையாசிரியர் வாட்ஸ் அப் செய்தி அனுப்பியுள்ளார்.

 மேலும் அனைத்து பெற்றோர்களுக்கும் இந்த வாட்ஸ்அப் செய்தி மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.

 இந்த செய்தி நேற்று (27) அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பில் பலபிட்டிய ரேவத தேசிய பாடசாலையின் அதிபர்இ பள்ளி முழுவதும் நாய் ண்ணிகள் மற்றும் சிறிய  தெள்ளுப் பூச்சிகள் உள்ளன.

 பொது சுகாதார பரிசோதகர்களால் தேவையான மருந்துகளை பயன்படுத்தி பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது புஞ்சைகள் அழிக்கப்பட்டுள்ளன. 

இன்னும் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து விசிறப்பட்டு வருகின்றது. தெருநாய்களால்இ உண்ணிகள்தோன்றியுள்ளன. 

இதற்கு முன்னரும் இந்தப் பிரச்சினை வந்து இராணுவம் தீர்த்து வைத்துள்ளது. புதன்கிழமை போயாவை முன்னிட்டு குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டது.

 பலபிட்டிய நிர்வாக பொது சுகாதார வைத்திய அதிகாரி சஞ்சீவ டி சில்வா, பள்ளியை மூடுவதற்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை. 

முன்பெல்லாம் நாய் உண்ணிகள் பிரச்சனை இருந்தது. அதற்கு மருந்துகளை வீசி, பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம் என்று அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4