பிரிட்டனில் விமான சேவையில் சிக்கல் நிலை!

#Flight #Airport #Britain
Mayoorikka
1 year ago
பிரிட்டனில் விமான சேவையில் சிக்கல் நிலை!

பிரிட்டனில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான திட்டங்களை வழக்கம் போல் தானியங்கி முறையில் இயக்க முடியாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 இதன் காரணமாக விமானிகள் விமானத்தை இயக்கும் வழித்தடம் பற்றிய தகவல்களை தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முழுமையாக முடங்கவில்லை என்ற போதிலும், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், பல விமானங்கள் தாமதமாகவும் கிளம்பி செல்ல நேர்ந்தது.

 இதன் காரணமாக பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். திங்கள் கிழமை தினத்தில் வான் போக்குவரத்து அதிக பரபரப்பாக இருக்கும் என்பதால், கட்டுப்பாட்டு மைய தொழில்நுட்ப கோளாறு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 இது ஒருபுறம் இருந்த போதிலும், தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!