பிரான்ஸ் அரசிடம் இழப்பீடு கோரும் வைன் மற்றும் திராட்சை உற்பத்தியாளர்கள்
பிரான்ஸில் உள்ள வைன் தயாரிப்பாளர்கள் மற்றும் திராட்சை உற்பத்தியாளர்கள் அதற்காக அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியுள்ளனர். தமது தொழிற்துறை முற்றாக பாதிப்படைந்துள்ள நிலையில் இவ்வாறு இழப்பீடு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் குறைவடைந்த நுகர்வு காரணமாக பிரான்ஸின் வைன் உற்பத்தித்துறை பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வைன் உற்பத்தியை நிறுத்துவதற்கு பிரான்ஸ் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், தமது நிலத்தின் ஒரு பகுதியை வேறு ஏதேனும் தேவைக்கு பயன்படுத்துவதற்கு விரும்பம் தெரிவித்து இழப்பீடு கோரி 584 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த பின்னணியில், சுமார் 12,350 ஏக்கர் திராட்சை தோட்டங்கள் அழிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பிரான்ஸில் தண்ணீருக்கான தேவையும் எதிர்காலத்தில் மிகப்பாரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, மேலதிக உற்பத்திகளை அளிக்கவும், வைன் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், பிரான்ஸ் அரசாங்கம் சுமார் 200 மில்லியன் யூரோவை செலவிடவுள்ளதாக அறிவித்துள்ளது.