லண்டனில் நடந்த கலாச்சார திருவிழாவில் 85 பேர் போதைப்பொருளுடன் கைது

#Arrest #Festival #drugs #England
Prasu
1 year ago
லண்டனில் நடந்த கலாச்சார திருவிழாவில் 85 பேர் போதைப்பொருளுடன் கைது

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 

இது கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிப்பதற்காக ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது.

இந்தநிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. 

முதல் நாளான நேற்று கண்கவர் உடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடினர்.

அதேசமயம் இந்த விழாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை பலர் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 

அதன்பேரில் போதைப்பொருள் வைத்திருந்த 85 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!