பிரான்ஸில் குளியல் தொட்டியில் சிறுவனது சடலம் மீட்பு - சந்தேகத்தில் தாய் கைது

#Arrest #Police #France #Murder #Lanka4 #பொலிஸ் #லங்கா4 #சிறுவர் #பிரான்ஸ்
பிரான்ஸில் குளியல் தொட்டியில் சிறுவனது சடலம் மீட்பு - சந்தேகத்தில் தாய் கைது

குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படும் ஐந்து வயது சிறுவன் ஒருவனது சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

 சிறுவனின் தயார் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் Annecy நகரில் கடந்த ஓகஸ்ட் 16 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

 அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வீடொன்றில் வசிக்கும் ஐந்து வயதுச் சிறுவனது சடலமே மீட்கப்பட்டுள்ளது. சிறுவன் காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்ததாக உடற்கூறு பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

 சந்தேகத்துக்கிடமான நபராக சிறுவனின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சம்பவத்தில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்த அப்பெண், அந்நியர்கள் வீட்டுக்குள் நுழைந்து தமது மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டினார். 

ஆனால் மேற்படி குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதை அடுத்து, அப்பெண் தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார். சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!