பிரித்தானியாவில் நடப்பது என்ன? சைபர் தாக்குதல் இல்லை என அரசு மறுப்பு
பல நாட்டவர்கள் நூறாண்டுகளாக வாழும் பிரித்தானியாவில் பல தாக்குதல்கள் நடப்பது வழமை. இப்போ தொழில் நுட்ப்பத்தை வைத்து மக்களை குழப்பி பலன் அடைய பல குழுக்கள் பிரித்தானியாவுக்குள் ஊடுருவி உள்ளதும், மின் தொழில் நுட்ப்பத்தால் ஊடுருவுவதும் வளக்கமானதாக ஆகிவிட்டது.
அவ்வகையில், தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளில் ஏற்பட்ட தவறு காரணமாக, பிரித்தானியாவில் அனைத்து விமானங்களில் கால் பகுதிக்கும் மேலானவை திங்களன்று ரத்து செய்யப்பட்டன. செவ்வாய்கிழமையும் விமானங்களில் செல்வதற்கு பயணிகள் முண்டியடித்துள்ளனர்.
இதனால், தாமதங்களும் இரத்துகளும் தொடர்வதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரிக்கும் என பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
"எங்களுக்க கிடைத்த தகவல்களின்படி இது, சைபர் தாக்குதல் இல்லை" என்று அவர் மேலும் தெரிவித்தனர். "தொழில்நுட்ப சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும்."
தொழில்நுட்பக் கோளாறால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல சில நாட்கள் ஆகும்" என்று போக்குவரத்து செயலாளர் மார்க் ஹார்பர் முன்னதாக அறிவித்திருந்தார்.
"மக்களுக்கு எந்த வகையிலும் உதவியாக இல்லை" என்று அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் இது ஒரு சைபர் தாக்குதல் அல்ல என்து தெளிவாகிறது" என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
பிரித்தானிய (9:00 BST) நிலவரப்படி, 147 அல்லது 5 வீதம், புறப்படும் விமானங்களில் 134 அல்லது 5 வீத வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏவியேஷன் தரவு நிறுவனமான Cirium தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து செயலாளர் ஹார்பர் அனைத்து தொழில்துறை பங்கேற்பாளர்களுடனும் "தொடர்ச்சியான கலந்துரையாடலில்" இருப்பதாகவும், விமான நிறுவனங்களுடன் பேசுவார் என்றும் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
ஏவியேஷன் தரவு நிறுவனமான Cirium படி, திங்களன்று 790 புறப்படும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன, இது அனைத்து புறப்பாடுகளிலும் சுமார் 27 வீதம் ஆகும்.
உள்வரும் விமானங்களில் 785 அல்லது சுமார் 27 வீதம் ஆகும்.
ஹீத்ரோவில் அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக Cirium தெரிவித்துள்ளது.