ஆமைகள் உயிரிழந்தமை குறித்து விசாரணை செய்ய குழு நியமனம்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
ஆமைகள் உயிரிழந்தமை குறித்து விசாரணை செய்ய குழு நியமனம்!

இலங்கையை சுற்றியுள்ள கடற்கரையில் காணப்படும் ஆமைகள் ஆழ்கடலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

ஜா-அல கடற்கரையில் இருந்து பாணந்துறை கடற்கரை வரை இதுவரை 25 இறந்த ஆமைகளும் , இரண்டு உயிருள்ள ஆமைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து ஆமைகளும் ஓட்டின் மேற்புறம் கடுமையாக விரிசல் அடைந்திருப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.  சில ஆமைகள் மூளை பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.  

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் ஏதேனும் வெடிமருந்துகளை பயன்படுத்தியதால்  இந்த விபத்து இடம்பெற்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக 04 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களுக்குள் இறப்புக்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4