பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபருக்கு கொண்டு வரப்பட்ட உணவுப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ்

#SriLanka #Police
Prathees
2 years ago
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபருக்கு கொண்டு வரப்பட்ட உணவுப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ்

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர் ஒருவருக்கு கொண்டு வரப்பட்ட உணவு பார்சலில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் பொதியை அனுப்பி வைத்த சந்தேக நபரின் மனைவியை கைது செய்ய சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் ஆகியோரின் கையை சந்தேக நபர் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 பொலிஸ் காவலில் உள்ள போதைப்பொருள் சந்தேக நபரின் நண்பருக்கு மனைவி இந்த உணவு பொதியை அனுப்பி வைத்துள்ளார். 

உணவு பொதி மீது சந்தேகம் அடைந்த பொலிசார்இ அதை ஆய்வு செய்த போதுஇ ​​பெரிய மீன் துண்டில் ஐஸ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

 இதன்படி, பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்வதற்காக வீட்டுக்குச் சென்ற போதுஇ ​​சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளை கடித்துவிட்டு ஓட முற்பட்டுள்ளார்.

 அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சந்தேகநபரிடம் மேலும் ஐந்து ஐஸ் போதைப்பொருள் பொதிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4