இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

#India #SriLanka #China #Lanka4
Thamilini
2 years ago
இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இலங்கை வரும் அவர், 03 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுவார் என இலங்கை பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 

அவருடைய இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான முக்கிய விடயங்களை கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் திருகோணமலை பகுதிக்கு விஜயம் செய்வார் எனவும், அங்குள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தையும் அவதானிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கையில் நிலைநிறுத்தப்படுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், இந்தியா இந்த விடயம் தொடர்பில் கரிசனைக்கொண்டுள்ளது. 

அத்துடன் பல்வேறு பாதுகாப்பு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4