இலங்கைக்கு கிடைத்த 701 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு!

#SriLanka #Investment #Lanka4
Thamilini
2 years ago
இலங்கைக்கு கிடைத்த 701 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 701 மில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக  இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை நாட்டுக்கு கொண்டுவருவதே இவ்வருடத்தின்  இலக்கு எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த ஒரு பில்லியன் டொலர்களைக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது அதன் முதற்காலாண்டில் இருக்கிறோம். 

தற்போது எங்களிடம் 701 மில்லியன் டொலர் முதலீட்டு பணம் உள்ளது. முதல் காலாண்டில் இதைச் செய்தேன். தற்போது எங்கிடம் 280 மில்லியன் டொலர் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 

சீனத் திட்டம் ஒன்றும், பழைய வாகனங்களை கொண்டு வந்து மறுசுழற்சி செய்யும் திட்டம் ஒன்றும், கொரிய முதலீடு 250 மில்லியன் டொலர்கள் அடங்கிய திட்டமொன்றும் உள்ளன. முதல் 5 மாதங்களில் இலக்கை எட்டிவிடுவோம். மேலும், ஹம்பாந்தோட்டையில் 1.6 பில்லியன் டொலர் சுத்திகரிப்பு நிலையம் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4