தேரேறி அருள் பாலித்தார் அன்னதானக் கந்தன்: பெருமளவாக திரண்ட பக்தர்கள்

#SriLanka #Jaffna #Temple #Festival
Mayoorikka
2 years ago
தேரேறி அருள் பாலித்தார் அன்னதானக் கந்தன்: பெருமளவாக திரண்ட  பக்தர்கள்

அன்னதானக் கந்தன்' எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(30.08.2023) காலை-08 மணியளவில் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. 

 இந்த தேர்திருவிழாவை காண யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்து முருகனின் அருளை பெற்றுள்ளனர்.

 நூற்றுக்கும் மேற்பட்ட பறவைக்கு காவடிகள் , ஆட்டக்காவடிகள், பாற் செம்பு போன்றவை சன்னதியான் ஆலயத்திற்கு வந்து நேர்த்திக்கடன்களை செலுத்தி சென்றனர்.

 ஆலய வீதிகளிலும், ஆலயத்திற்கு  வரும் நான்கு பக்க வீதியை அண்மித்த பகுதிகளிலும் மக்களின் தாக்கங்களை தீர்ப்பதற்காக நல்லுங்களினால் தாக சாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 இதேவேளை, இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழாவின் தீர்த்தத் திருவிழா நாளை மறுதினம் வியாழக்கிழமை(31.08.2023) காலை-07 மணியளவிலும் , மெளனத் திருவிழா அன்றையதினம் மாலை-05 மணியளவிலும் நடைபெறும்.

images/content-image/2023/08/1693375450.jpg

images/content-image/2023/08/1693375435.jpg

images/content-image/2023/08/1693375411.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4