ஈராக்கில் மூன்றாவது பிரெஞ் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
#France
#Attack
#Lanka4
#Terrorist
#தாக்குதல்
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago

ஈராக் நாட்டில் கடமைகளில் ஈடுபட்டிருந்த Nicolas Mazier எனும் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் நேற்று செவாய்க்கிழமை பலியாகியுள்ளார்.
கடந்த 10 நாட்களில் பதிவாகும் மூன்றாவது மரணம் இதுவாகும். ஈராக்கிய இராணுவத்தினருடன் இணைந்து பிரெஞ்சு இராணுவத்தினர் அங்கு இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈராக்கின் Kirkuk நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த பிரெஞ்சு இராணுவ வீரர் பலியாகியுள்ளார்.
தாயேஸ் பயங்கரவாதிகள் (Daesh) மேற்கொண்ட தாக்குதலிலேயே குறித்த வீரர் பலியானதாக பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்தவாரம் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றின் போது இரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



