எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிரதமர் வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க இரகசிய சதி

#SriLanka #Ranil wickremesinghe #Dinesh Gunawardena #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பிரதமர்  வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க இரகசிய சதி

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க மேற்குலக தூதரகம் இரகசிய சதியை ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 எவ்வாறாயினும், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படும் தினேஷுக்கு பல சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு பிரதமரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதியின் வருகைக்கு சம்பந்தப்பட்ட தூதரகமும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த நாளிதழ் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

 இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கரியமில வைப்பு கொள்கையின் கீழ் இலங்கைக்கு 12 பில்லியன் டொலர்கள் கிடைக்க உள்ளதாகவும், இது முன்னாள் நோவிடன் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தில் ஜனாதிபதி தேர்தல் அல்லது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4