'சந்திரமுகி 2' படத்தின் வைரலாகும் 'ஆட்டநாயகி' பாடல்

#Cinema #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
'சந்திரமுகி 2' படத்தின் வைரலாகும் 'ஆட்டநாயகி' பாடல்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், வடிவேலு, ராதிகா மற்றும் பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள 'சந்திரமுகி 2' படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலாகின.

இந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்போது ‘சந்திரமுகி-2’ படத்தின் 'ஆட்டநாயகி' என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடலை ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் பிரபலமாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4