பிரான்ஸ் இல் து மாகாணத்தில் நுளம்புகள் பெருக்கம்
இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் நுளம்பு பெருக்கம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 25 ஆம் திகதி வரை டெங்கு மற்றும் சிக்கன்குன்யா காய்ச்சல்கள் இதுவரை 138 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
அதையடுத்து இல் து பிரான்சுக்குள் நுளம்புகளுக்கு எதிராக பூச்சிகொல்லி மருந்து தெளிக்கும் நடவடிகை பிராந்திய சுகாதார பிரிவினரால் (Île-de-France Regional Health Agency (ARS) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணியில் இருந்து 2.30 மணிவரை இந்த பூச்சி கொல்லி தெளிக்கும் பணிகள் இடம்பெற உள்ளது. அதையடுத்து இல் து பிரான்சின் வெவ்வேறு பகுதிகளில் இந்த பூச்சிகொல்லி தெளிக்கும் பணிகள் இடம்பெற உள்ளன.
வீதிகளில், வீதிக்கரைகளில் பூச்சி நாசினி தெளிக்கப்பட்டு நுளம்புகள் அழிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.