எக்ஸ்பிரஸ் பேர்ள் இடைக்கால இழப்பீட்டை பெற அரசாங்கம் இணக்கம்

#SriLanka
Prathees
2 years ago
எக்ஸ்பிரஸ் பேர்ள் இடைக்கால இழப்பீட்டை பெற அரசாங்கம் இணக்கம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான இடைக்கால இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

 இது தொடர்பான தேவையான அறிவித்தல்கள் கப்பலின் காப்புறுதி நிறுவனத்திற்கும் சட்டத்தரணி நிறுவனத்திற்கும் எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால இழப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் இந்த இடைக்கால இழப்பீடு பெறப்படவுள்ளது.

 கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை இடைக்கால நட்டஈடாக 890 இலட்சம் டொலர்களையும் 16 மில்லியன் ரூபாவையும் கோரியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 கப்பல் நிறுவனத்தின் காப்புறுதி நிறுவனமும் சட்ட நிறுவனமும் இடைக்கால இழப்பீடு வழங்குவதற்கு முன்னர் விருப்பம் தெரிவித்திருந்தன.

 அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் இருதரப்பும் இந்த ஒப்பந்தங்களை குறிப்பிட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4