கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள CT ஸ்கேன் இயந்திரமும் பழுதடைந்துள்ளது!

#SriLanka #Hospital #Lanka4
Thamilini
2 years ago
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள CT ஸ்கேன் இயந்திரமும் பழுதடைந்துள்ளது!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள 4 CT ஸ்கேன் இயந்திரங்களில் இரண்டு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் நோயாளர்கள் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம, " ஒரு நாளைக்கு 250க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு CT ஸ்கேன் பரிசோதனை செய்வதாகவும், தற்போது இரு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது நாட்டில் 07இற்கும் மேற்பட்ட சிடி இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாக  தெரிவித்த அவர், அவை விரைவில் மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இல்லையேல் CT ஸ்கேன் பரிசோதனைகளுக்காக தனியார் துறையை நாடவேண்டியிருக்கும் எனவும், இதனால் அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4