கெப் ரக வாகனம் விபத்து - 15 பேர் காயம்!

#SriLanka #Accident #Lanka4
Thamilini
2 years ago
கெப் ரக வாகனம் விபத்து - 15 பேர் காயம்!

ரகலை -வலப்பனை பிரதேசத்தின், ஹரஸ்பத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று (30.08) அப்பகுதியில் இடம்பெற்ற ஆலய  திருவிழாவொன்றில் கலந்துகொண்ட ஒரு குழுவினர் வீடு திரும்பும்போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த 15 பேரும் வீதிக்கு தூக்கி வீசப்பட்டதை அடுத்து, காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வாகனத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 





இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4