பொத்துவில் மசாஜ் நிலையத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான இஸ்ரேல் யுவதி

#SriLanka #Women #Abuse #Massage #Israel
Prasu
2 years ago
பொத்துவில் மசாஜ் நிலையத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான இஸ்ரேல் யுவதி

பொத்துவில் சுற்றுலாப் பிரதேசத்திலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்கு மசாஜ் செய்வதற்காகச் சென்ற 23 வயதுடைய இஸ்ரேலிய யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட குறித்த யுவதி பொத்துவில் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மசாஜ் நிலையத்தில் சிகிச்சையாளராக கடமையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4