பென் வாலஸ் பதவி விலகினார்!

#world_news #Lanka4
Dhushanthini K
1 year ago
பென் வாலஸ் பதவி விலகினார்!

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பதவியை பென் வாலஸ் இராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பிரதமர் ரிஷி சுனெக்கிடம் அவர் கடிதம் மூலம் முறைப்படி அறிவித்துள்ளார். 

குறித்த கடிதத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தான் பணியாற்றிய ஆயுதப் படைகள் மற்றும் உறுத்துறை சேவைகளை பாராட்டியுள்ளார்.

உக்ரைனில் நடந்த போருக்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பை பாராட்டிய அவர், ரிஷி சுனக் அதிபராகவும் பின்னர் பிரதமராகவும் ஆயுதப்படைகளில் முதலீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தார்.

அத்துடன் உலகம் மேலும் பாதுகாப்பற்றதாகவும் மேலும் நிலையற்றதாகவும் மாறும் என்றும், பிரித்தானிய அரசாங்கமானது இராணுவத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரின் "ஆதரவு" மற்றும் "நட்பிற்கு" நன்றி கூறிய அவர், உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எனது தொடர்ந்து ஆதரவு இருக்கும்" என்றும்  கூறினார்.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!