இலங்கைக்கு செல்வோருக்கு இலகுவாக்கப்படும் விசா ஒழுங்குகள்

#SriLanka #Tourist #Lanka4 #இலங்கை #லங்கா4 #சுற்றுலா #Visa
இலங்கைக்கு செல்வோருக்கு இலகுவாக்கப்படும் விசா ஒழுங்குகள்

இலங்கைக்கு படையெடுக்கபோகும் உல்லாசபிரயாணிகள் இலங்கையில் அமுலில் இருக்கும் வீசா நடைமுறையை மீளாய்வு செய்வதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் செயற்பட்டுள்ளதுடன், தற்போதைய வீசா முறையை இலகுபடுத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு செயற்பட்டுள்ளது.

 வருகை விசா மற்றும் வதிவிட விசா ஆகிய இரண்டு வகையான விசாக்களின் கீழ் விநியோகிக்கப்படும் விசா வகைகளின் தற்போதைய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு மற்றும் வெளிநாட்டு ஈர்ப்பு அதிகளவில் உள்ள நாடுகளில் செயல்படுத்தப்படும் விசா முறைகளைக் கருத்தில் கொண்டு இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள விசா முறையை மறுபரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் மற்றும் அதன் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு வருகை விசா, வதிவிட விசா மற்றும் போக்குவரத்து வீசா என மூன்று வகையான விசாக்களை விநியோகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4