கண்ணீர் நதியாக மாறிய பாடசாலைச் சுற்றுலாப்பயணம்

#SriLanka #Death
Prathees
2 years ago
கண்ணீர் நதியாக மாறிய பாடசாலைச் சுற்றுலாப்பயணம்

உடவளவ சங்கபால ஸ்ரீ குணரதன மகா வித்தியாலயத்தின் 41 பேரைக் கொண்டகல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட குழுவினர் நேற்று (30) பிற்பகல் உல்லாசப் பயணத்திற்காக கடலுவ பாலத்திற்கு அருகில் உள்ள முகத்துவாரத்தில் நீராடச் சென்ற போது, ​​அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். 

மேலும் சிலர் நீரில் மூழ்கி மீட்கப்பட்டதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் நீந்திக் கொண்டிருந்த போது, ​​அவர்களில் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.

 உடன் அங்கிருந்த 2 பேர் அவரை காப்பாற்ற சென்றதில் இருவரும் நீரில் மூழ்கினர். பின்னர், அப்பகுதி மக்கள் மற்றும் பொலிசார் இருவரையும் காப்பாற்றியுள்ளனர். 

 அவர்கள் இருவரும் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 உடவலவ சங்கபால ஸ்ரீ குணரதன மகா வித்தியாலயத்தில் பணியாற்றிய கல்விசாரா ஊழியர் ஹர்ஷ ஹேமால் விஜேவர்தன (வயது 35) என்பவர் நீரில் மூழ்கி காணாமல் போனவர். 

 இவர் கஹவலதென்ன, பலாங்கொடை பிரதேசத்தில் வசிப்பவர். காணாமல் போனவரின் சடலத்தை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4