ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்க முயற்சிப்பதாக தயாசிறி குற்றச்சாட்டு!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்க  முயற்சிப்பதாக தயாசிறி குற்றச்சாட்டு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்கு ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் ஜனாதிபதி என்னை வைத்திருக்க விரும்பவில்லை என்றால். நிர்வாக சபை என்னை விரும்பவில்லை என்றால், நான் வெளியேற விரும்புகிறேன்.

நான் கீழே இருந்து தள்ள மாட்டேன், என்னைத் தள்ளுவது மேல்மட்டத்தில் உள்ளவர்கள். அதற்கு நான் பயப்படவில்லை. என்னால் பெயர்களை குறிப்பிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4