இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான நுழைவு கட்டணம் சடுதியாக குறைப்பு

#India #SriLanka #Pakistan #Cricket #AsiaCup
Prasu
2 years ago
இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான நுழைவு கட்டணம் சடுதியாக குறைப்பு

ஆசிய கோப்பையில் நாளை நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் கட்டணம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான அதிகளவிலான நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிக்கான குறைந்த டிக்கெட்டின் விலை ஆரம்பத்தில் சுமார் பத்தாயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு தற்போது 1500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

 விலை குறைப்பால் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4