பாடசாலைகளில் அபாயா உடை அணிதல் தொடர்பில் பிரான்ஸின் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்

#France #Lanka4 #President #லங்கா4 #ஜனாதிபதி #பிரான்ஸ்
பாடசாலைகளில் அபாயா உடை அணிதல் தொடர்பில் பிரான்ஸின் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்

பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு அனுமதிஇல்லை என்பதை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதி செய்துள்ளார்.

 அவ்விடயத்தில் மிக இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.

 ‘பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் என எவரும் அபாயா அணிந்து செல்லஅனுமதி இல்லை!’ என கல்வி அமைச்சர் கேப்ரியல் அத்தால் கடந்தவியாழக்கிழமை அறிவித்தார். 

உடனடியாக தீ போல் பரவி விமர்சனங்களுக்கு உள்ளான இந்த முடிவு தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதிஇம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டார்.

 அவர் தெரிவித்ததில், “அதில் ஒரு அர்த்தம் இருப்பது எனக்கு தெரிகிறது. பலர் குடியரசு திட்டங்களுக்கு சவாலாகஇருக்கின்றனர். எனவே நாம் அதில் தலையிடவேண்டும். மதங்களை பிரதிபலிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது தான். ஆனால் சகிப்புத்தன்மையை சீண்டிப்பார்க்கும் நடைமுறைகளை நாம் தடுத்தாக வேண்டும். 

பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்இவ்விடயத்தில் அழுத்தத்தை எதிர்கொள்ள நாம் அனுமதிக்கமாட்டோம்.” எனஜனாதிபதி தெரிவித்தார். நேற்றைய தினம் Orange (Vaucluse) நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தஜனாதிபதி மக்ரோன், அங்கு வைத்தே இதனைத் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!