பிரித்தானியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடுமாறு உத்தரவு!
#School
#world_news
#Lanka4
Dhushanthini K
1 year ago
பிரித்தானியா முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பற்ற கான்கிரீட்டைப் பயன்படுத்தி பாடசாலைகளை நிர்மாணிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ள நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எடை அதிகமில்லாத ‘ஆர்ஏஏசி’ எனும் கான்கிரீட் வகையைப் பயன்படுத்தி பாடசாலை கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 1950 - 1990களின் நடுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் விரைவில் இடிந்து விழும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கைப்பட்டுள்ளதுடன், அவ்வாறான பாடசாலைகளை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.