வேட்டைக்காரர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த தீர்மானம்

#SriLanka #Forest #PavithraWanniarachchi
Prathees
2 years ago
வேட்டைக்காரர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த தீர்மானம்

காட்டுத் தீ மூட்டுபவர்கள் மற்றும் விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார்.

 அதன்படி, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும், முப்படையினர், பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை, தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியன இணைந்து மாவட்ட மட்டத்திலும் பிரதேச செயலக மட்டத்திலும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.

 காடுகளைப் பாதுகாப்பதற்கும் அவற்றை சேதப்படுத்துபவர்களைக் கவனிப்பதற்கும் கிராம மட்டத்தில் நிறுவப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின் உதவியுடன் இலங்கை பொலிஸ் திணைக்களம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

 அத்துடன், யானை வேலி அமைக்கப்படாத இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

 ஆகஸ்ட் 21, 2023 நிலவரப்படி, யானை-மனித மோதலால் 55 யானைகள் மற்றும் 17 மனித இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

 இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை காட்டு யானைகளால் 47 சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. 

2022 இல், சேதங்களின் எண்ணிக்கை 493 ஆகும். 2023 ஆம் ஆண்டு வரை மூன்று கோடியே எழுபத்து முந்நூற்று ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய் (ரூ. 37,356,016) இழப்பீட்டுத் தொகைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4