கோலி மீதான அன்பு.. எதிர்த்த அங்கிளுக்கு பாகிஸ்தான் ரசிகை கொடுத்த பதிலடி

#India Cricket #Lanka4 #sports #Sports News
Kanimoli
1 year ago
கோலி மீதான அன்பு.. எதிர்த்த அங்கிளுக்கு பாகிஸ்தான் ரசிகை கொடுத்த பதிலடி

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ‛‛விராட் கோலி தான் தனது பேவரைட்' பிளேயர் எனக்கூறிய நிலையில் குறுக்கீட்டு பேச முயன்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரசிகரை ‛அங்கிள்' என அழைத்து தனது கன்னத்தை காட்டி கூறிய அந்த ஒற்றை வார்த்தை அனைவரிடமும் பாராட்டை குவித்து வருகிறது.

 கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்வது என்பது எப்போதும் ஹைவோல்டெஜ் மேட்சாகவே இருக்கும். எப்படியாவது பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் இந்திய வீரர்களும், , இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என பாகிஸ்தான் வீரர்களும் கடைசி வரை போராடுவார்கள். இருநாட்டு வீரர்களும் மல்லுக்கட்ட மைதானத்தில் ரசிகர்கள் மனதிலும் தங்கள் நாடு தான் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கம் மேலோங்கி இருக்கும். 

இதனால் தான் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இப்படியான சூழலில் தான் நேற்று ஆசியக்கோப்பை தொடருக்கான போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இலங்கையில் இந்த போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் ரோகித் சர்மா 11 ரன், விராட் கோலி 4 ரன், ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன், கில் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து இதையடுத்து 267 ரன்களை இலக்காக வைத்து பாகிஸ்தான் களமிறங்க தயாரான நிலையில் மழை பெய்தது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டது. இதனால் இரு அணி ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

 இந்த தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாளத்துடன் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அந்த அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்தியா ஒரு புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் நாளை நோபாளத்துடனான போட்டியில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!