சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நிலைப்பாடு குறித்து கலந்துரையாடல்

#SriLanka #Meeting #Lanka4 #TNA #sritharan
Kanimoli
2 years ago
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நிலைப்பாடு குறித்து கலந்துரையாடல்

சுகாதார அமைச்சர் ஹெகேலிய ரம்புக்வெலவுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்களிப்பிலிருந்து விலகியிருப்பதா என்ற நிலைப்பாட்டை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடும் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முடிவெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார்.

 மலையாளபுரம் கிராம மக்களுடனான கலந்துரையாடல் ஒன்று மலையாளபுரம் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலைத்தொடர்ந்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் இன்று வைத்தியசாலைகளின் சாதாரண நீரிழிவு நோயாளருக்கு கூட மருந்து இல்லாத நிலை வைத்தியசாலைகளில் பாரிய மருந்து நெருக்கடி நிலவுகிறது. 

மருந்துகளை நோயாளர்கள் வெளியில் வாங்க வேண்டிய நிலையுள்ளது. பல வைத்தியசாலைகள் இயங்கு நிலையற்று காணப்படுகிறது. இலங்கையின் சுகாதார துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இதனைஉள்வாங்கியிருக்கிறோம் . பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற ரீதியில் கலந்தாலோசித்து வெள்ளிக்கிழமைக்கிடையில் முடிவை அறிவிப்போம் என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4