விபத்தில் தந்தையும் மகளும் பலி

#SriLanka #Death #Accident
Prathees
2 years ago
விபத்தில் தந்தையும் மகளும் பலி

ஹலவத்தை – மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளியாபிட்டிய, மாதம்பே பிரதான வீதியின் ஹடபண்டாரகம பகுதியில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற லொறி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். 

 இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 48 வயதுடைய தந்தையும் 16 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மாதம்பே ஹடிபண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர். 

 இந்த விபத்தையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதால், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

 ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, நிலைமையைக் கட்டுப்படுத்திய பின்னர், பொலிசார் லொறி மற்றும் மோட்டார் சைக்கிளை எடுக்க முடிந்தது. 

 தனியார் கால்நடை உற்பத்தி நிறுவனமொன்றுக்கு சொந்தமான லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 விபத்தின் போது அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான வீதியில் சென்று கொண்டிருந்த மற்றுமொரு கொள்கலன் பாரவூர்தியை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி அதன் சாரதியை வாகனத்தில் இருந்து இறக்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

 இதன் காரணமாக மாதம்பே குளியாபிட்டிய வீதியின் போக்குவரத்து பல மணிநேரம் தடைப்பட்டது. லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4