நாட்டின் பெரும்பாலான இடங்களில் 100 மி.மீ மழைவீச்சி பதிவாகும்!

#SriLanka #weather #Lanka4
Thamilini
2 years ago
நாட்டின் பெரும்பாலான இடங்களில் 100 மி.மீ மழைவீச்சி பதிவாகும்!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று (04.09) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

இதன்படி  மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன்,  அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிய அளவில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின்  மேற்கு சரிவுகள் மற்றும் மேற்கு, தெற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் திணைக்களம் முன்னுரைத்துள்ளது. 

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் காற்றானது 40-45 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை   ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும்,  கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. 

ஆகவே அனர்த்த நிலைமைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4