வெல்லம்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேகநபர் கைது

#SriLanka #Arrest
Prathees
2 years ago
வெல்லம்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: சந்தேகநபர் கைது

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 குறித்த சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்தே அது இடம்பெற்றுள்ளது. 

கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட பெண் ஒருவர் முன்பு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

 சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ வீதிப் பகுதியில் கடந்த 28ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4