ஜனாதிபதியை படுகொலை செய்ய முகநூல் மூலம் ஸ்னைப்பர் கேட்ட இளைஞர் கைது

#SriLanka #Arrest #Ranil wickremesinghe
Prathees
2 years ago
ஜனாதிபதியை படுகொலை செய்ய  முகநூல் மூலம் ஸ்னைப்பர் கேட்ட இளைஞர் கைது

எப்பாவல பிரதேசத்தில் பாடசாலை விழாவொன்றுக்கு வரும் ஜனாதிபதியை படுகொலை செய்ய திட்டமிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த இளைஞர் தனக்கு ஸ்னைப்பர் வேண்டும் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

 இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் இளைஞன் எப்பாவல, மடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 எப்பாவல ஸ்ரீ சித்தார்த்தா தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4