திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரிசனம்!

#Cinema #Actor #Actress #TamilCinema
Mani
2 years ago
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரிசனம்!

ஜவான் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜவான் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜவான் படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

நடிகர் ஷாருக்கான், அவரது மகள், நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இன்று காலை சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தங்க கொடிமரத்தை வழிப்பட்டனர்.

அவர்களுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் திரண்டதால் ஷாருக்கான் வேகமாக காரில் ஏறிச் சென்றார். அதே போல் நயன்தாரா, விக்னேஷ் சிவனும் வேக வேகமாக கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4