இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதேநேரம் மன்னார் மாவட்டத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், அவ்வவ்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் முன்னரைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மழை பெய்யும் சந்தர்பங்களில் காற்றானது மணிக்கு  40-45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4