சிவகார்த்திகேயனின் "அயலான்" படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

#Cinema #Actor #TamilCinema #Director #2023 #Tamilnews
Mani
2 years ago
சிவகார்த்திகேயனின் "அயலான்" படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தினை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதை ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனைத் தவிர, ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.

4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக 'அயலான்' இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இப்படத்தின் சிறிய முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது, இது தீபாவளிக்கு வெளியாகும் என்றும் டீசரை படக்குழு தயார் செய்து வருவதாகவும் விரைவில் அதை வெளியிடுவார்கள் என்றும் தகவல் வெளியானது. ஆனால், அயலான் படத்தின் பணிகள் முடிவடையாததால், படம் தாமதமாகும் என்றும், தற்போது 2024 பொங்கல் வெளியீடாக இப்படம் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4